கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும். கிராம பிரச்சினைகளை தீர்க்க கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அப்போது கிராம சபை கூட்டத்தில் பேசினார். அவர் அப்போது பேசியது யாதெனில்
கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும். கிராம பிரச்சினைகளை தீர்க்க கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்?
கொரோனாவை விட திமுகவை கண்டுதான் முதல்வர் அதிகம் அச்சப்படுகிறார் என கூறினார் மேலும் அவர் அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? எனக்கேள்வி எழுப்பினார்.




