வேளாண் கருப்பு சட்டங்களை நிறைவேற்றி விவசாயிகளுக்கு பி ஜே பி அரசு அநீதி இழைத்து விட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சோனியா காந்தி கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு சட்டத்தையும் இயற்றியதில்லை எனவும் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை உணர்ந்து மோடி அரசு செயல்பட வேண்டும் என்றும் கூறினார். வேளாண் சட்டத்தை திரும்பப் பெரும் வரை காங்கிரஸ் கட்சி விவசாயிகளுடன் இணைந்து தொடர்ந்து போராடும் எனவும் வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.




