வட்டிக்கு வட்டி தள்ளுபடி என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உலகில் யாருமே நினைத்துப் பார்த்திராத ஒன்று கொரொனா வைரஸ் இப்படி உலகப் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஸ்பிக்கச் செய்யும் என்பது.
கடந்த மார்ச் 24 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பின் மக்கள் வீட்டுக்கு முடங்கவேண்டிய நிலை உருவானதால் மக்கள் மாதந்திரத் தவணைகளான வீட்டுக் கடன், போன்றவற்றிக்கு தவணத்தொகைக் கட்டமுடியாமல் தவித்தனர்.
பலரும் அரசிடம் தவணைக் காலத்தை நீட்டிக்குமாறும் தள்ளிவைக்குமாறும் கோரினர். இதையேற்ற அரசு கோர்ட் உத்தரவுப்படி ஆகஸ்ட் மாதம்வரை தவணைத் தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் என்று தகவல் வெளியானநிலையுல் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குத் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் ரூ.2 கோடிவரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தகவல் தெரிவித்துள்ளது.