– விண்ணரசி இளங்கோ
அங்கும் இங்கும் காதலர்களை பார்க்கும்போது, காதல் உன்மையாகவே இருக்கிறது என்று தோன்றும். ஆனால், அது உண்மையல்ல என்று நெருங்கி சென்று பார்க்கும்போது தான் தெரிகிறது, அது வெறும் காணல் நீர் என்று. தொலைவில் இருந்து பார்க்கும்போது அழகாக தோன்றும்… நெருங்கி சென்று பார்க்கும் போது காணமல் போய்விடும்.
இது வெறும் வார்த்தைகள் அல்ல. இதுவே நிதர்சனமான உண்மை.
என் தோழி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். அழகான கண்கள், கூர்மையான மூக்கு, மெல்லிய இதழ்கள், முத்துப் போன்ற பற்கள், சராசரி உயரம், யாராக இருந்தாலும் ஒரு நொடி நின்று பார்க்கும் அழகு.
பள்ளிப் படிப்பை முடித்ததும், ஒரு சில காரணங்களால் உடனே கல்லூரியில் சேர முடியல. முதலாம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் கழித்துதான், நான் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்தாள். எங்கள் நட்பு பள்ளியையும் தொடர்ந்து, கல்லூரியிலும் தொடரும் என்று நினைக்கவில்லை. அதுவும் ஒரே துறை, ஒரே வகுப்பு, ஒரே மேசையில் அமரும் அதிர்ஷ்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது நடந்தது.
ஆனால் அது நிழைக்கவில்லை. ஆகஸ்ட் 7, வகுப்பில் அரட்டை, ஆர்ப்பாட்டம் என்று இருந்தோம். பள்ளி நினைவுகளை புது தோழிகளுடன் கூறி மகிந்திருந்தோம். அடுத்து வகுப்பில் பேராசிரியர் அனைவரிடமும் தங்களது சிறந்த எடுத்துக்காட்டு யார் என்று கேட்டார். அனைவரும் கூறினோம். என் தோழி, “என் தந்தையே எனது சிறந்த எடுத்துக்காட்டாளர்” என்று கூறினாள். அவள் கூறிய காரணங்கள் அனைவரையும் கவர்ந்தது.
அடுத்த நாள் அனைவரும் கல்லூரிக்கு வந்தோம். ஆனால் அவள் வரவில்லை. ஏன் என்று தெரியாமல் இருந்தது. எப்போதும் எல்லோரும் வரதுக்கு முன்னாடி வரும் அவள், வரவில்லை என்பது சற்று யோசிக்க வைத்தது.
வேறு ஒரு தோழி மூலம் தகவல் வந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற அவளது தந்தை, தண்டவாளத்தில் அடிப்பட்டு இறந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாய் இருந்தது. இரண்டு வாரங்களுக்கு கல்லூரிக்கு வரவில்லை.
இடையில் நாங்கள் படித்த பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. அவள் வரவில்லை, நான் சென்று இருந்தேன். எனது பள்ளி தோழிகள் மற்றும் தோழர்கள் வந்திருந்தனர். நாங்கள் அங்கிருந்து அவளைப் பார்த்து ஆறுதல் சொல்லப் போனோம்.
அவள் தந்தை இழப்பில் இருந்து மீள சில மாதங்கள் ஆனது. அவளுக்கு ஆதரவாய் தாயும் இல்லை… சகோதர சகோதரியும் இல்லை… ஏதோ வெறுப்பை இவள் மீது காட்டினார்கள். இதனால் மிகவும் மன கவலைக்கு ஆளானார். அவள் கூறிய வார்த்தைகளும் நினைவிருக்கிறது. வீட்டில் நிம்மதி இல்லை… கல்லூரியில் இருக்கும் இந்த நேரமே எனக்கு சில அமைதி தருகிறது என்று கூறினாள். கல்லூரி பிடிக்கவில்லை தோழிகளான உங்களைப் பிடித்திருக்கிறது, உங்களுடன் இருக்கும்போது சிறு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினாள்.
தந்தை இறந்த சில மாதங்கள் கழித்து அவளது அக்கா கர்ப்பமானாள். திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு, இந்த மகிழ்வான செய்தியும் அவளுக்கு நிழைக்கவில்லை. வீட்டில் சண்டைபோட்டு விட்டு சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு பேசவில்லை.
அண்ணணோ ஆதரவு தரவில்லை. அண்ணனும், அம்மாவும் வெறுப்பை இவள் மீது காட்டினார்கள்.
இப்படியே சில மாதங்கள் போய்விட்டன. இதற்கிடையில் முதல் பருவத்தேர்வு முடிந்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். இரண்டாம் பருவம் தொடங்கிய சில நாட்களில், தன்னுடைய பேருந்து நிலையத்தை மாற்றிக்கொண்டாள். காரணம், பேருந்து வரும் நேரம், வீட்டுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் கல்லூரி தோழிகளும் அதே பேருந்து நிலையத்தில் இருந்துதான் வருவார்கள்.
நாட்கள் நன்றாக போனது. இப்படியே சில மாதங்கள் போய்விட்டன.
மார்ச் 7, வழக்கம் போல் கல்லூரி முடிந்து மூன்று பேரும் தங்களது வழியில் சென்றார்கள். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சிகப்பு நிற ஸ்விஃப்ட் கார்.
அதில் இருப்பத்து நான்கு வயதுமிக்க இளைஞன். அவளிடம் வந்து நின்றது. அவள் செல்லும் வழி பக்கத்தில். அவளிடம் பேச முயன்றான். அவளை பல மாதங்களாக பின் தொடர்வதாய்க் கூறினான், மென்மையாக. அவன் பார்ப்பதற்கு கம்பீரமாக மீசை தாடியுடன் அழகாக தோன்றினான். அவள் கடுமையாக திட்டிவிட்டு, இதற்குமேல் என் பின்னால் வரவேண்டாம் என்று கூறினாள்.
அவன் அதற்கு, “நான் விருப்பத்தை உடனே தெரியனும் என சொல்லல, நாளைக்கு வருகிறேன், அப்போ சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
தன் குடும்ப சூழ்நிலையை அவனிடம் கூறினாள். தன் வீட்டில் காதலை ஏற்கமாட்டார்கள் என்ற விவரத்தையும் கூறினாள்.
அவன் அதற்கு வீட்டை விட்டு ஓடி போய்விடலாம் என்றான். அவன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினான். அவளும் அதனை நம்பினாள். மேலும் அவன் ரெயில்வே தேர்வு எழுதியுள்ளான் எனக் கூறினான்.
அவள் தன் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு சொந்த மாநிலத்திற்கு சென்று நிரந்தரமாக குடியேறயுள்ளதாக கூறினாள்.
அதற்கு அவன், “நான் உன்னை உன் சொந்த ஊருக்கே வந்து கூட்டிச்செல்றேன்” என்று கூறினான். அந்த அளவுக்குப் பேசியே மயக்கியிருந்தான்.
அவன் அக்கா என்று ஒருத்திப் பேசினாள். அதில் இருந்து இவனை முழுமையாக நம்பினாள். இப்படியே சில நாட்கள் போனது. வழக்கம் போல் தனது அறையில் அவனோடு பேசிக்கொண்டு இருந்தாள் செல்பேசியில். அன்று அவன் பேச்சில் தான் அவனது சுயரூபம் தெரிந்தது. அது அவளுக்கு மிகவும் வேதனையை தந்தது. அவன் பேச்சில் வக்கிர புத்தியும் அவளது உடலை அடைய வேண்டும் என்பதும் தெரிந்தது.
அதற்குப் பின்னர் தன் தோழிகளிடம் பேசி பல காரணங்களை கூறி அவனிடம் இருந்து விலகி விட்டாள். பின் பாடத்தில் கவனம் செலுத்தினாள். கல்லூரி ஒரு ஆண்டு படிப்பும் முடிந்தது. பின் தன் சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டாள். இருந்தும் தன் பள்ளி கல்லூரி தோழிகளுடன் தொடர்பில் இருந்தாள்.
இரண்டாம் ஆண்டு போது, என் பேருந்து மாற்றப்படும். வேறொரு வழியாகச் சென்றேன். இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து, நான் அவனைப் பார்த்தேன். எனக்கு அடையாளம் தெரியவில்லை. என்னோட மற்றொரு தோழி அடையாளம் கண்டு கூறினாள். அவன் என் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் தண்டவாளம் கடக்கும் இடத்தில் கேட் கீப்பராக இருக்கிறான். மேலும் அந்த வழியாக செல்லும் பேருந்தில் உள்ள பெண்களை நோட்டமிட்டு, வளையில் சிக்க வைப்பதே இவனது வேலையாக இருந்தது.
இதனை அறிந்து அந்த வழியாக செல்லும் என் கல்லூரி தோழிகளை எச்சரிக்கை செய்தேன். பின் இவனால் மனம் நொந்துப்போன என் தோழியிடம் இவனைப் பற்றி கூறினேன். அவள் இவனை வருத்தி மிகவும் வசைப்பாடினாள். அந்த அளவுக்கு மனம் நொந்துப்போய் இருந்தாள்.
இப்போது யாரும் உண்மையாக காதலிப்பது இல்லை. வெறும் பொழுதுபோக்காய், உடல் சுகத்திற்காக, வெளியில் சொல்ல முடியாத கொச்சை எண்ணங்களை கொட்டி தீர்க்க, ஒரு காதலி அல்ல காதலன் தேவைப்படுகிறது. சில சமயங்களில் இது பணம் பொருளுக்காக பிறரை ஏமாற்றுகிறார்கள்.
இதற்கு பல உண்மை சம்பவங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களால் எதிர்பாலினத்தின் மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது.
இது போன்ற நம்பிக்கை அற்ற காதலை என் நெருங்கிய தோழி சந்திக்க நேர்ந்ததால், ஒரு விழிப்புணர்வு என் தோழிகள் வட்டத்தில் ஏற்பட்டது. விழித்திருப்போம்.
– கதைப் படிக்கலாம் – 132
இதையும் படியுங்கள் : புல்வெளி புழு