இன்று பெங்களூர் அணி டெல்லி அணியுடன் மோதவுள்ளது.
இன்று பெங்களூர் அணி டெல்லி அணியுடன் மோதவுள்ளது.
இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர் , கொரொனாவால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மேட்சுகளும் வாழ்வா சாவா என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் கூட இந்தப் பரப்புக்குப் பஞ்சமில்லை.
இந்நிலையில் இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரேயா ஐயர்ஸ் தலைமையிலான டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டியும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.
இரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூர் அணி 14 போட்டிகளிலும் டெல்லி அணி 8 போட்டிகளிலும்வெற்றியும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .