பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோவில் முதல் நாளே ஏதோ காரசார விவாதம் இருப்பது போல் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. ‘Broken heart’ என்னும் அச்சு சனம் ஷெட்டியால் ஷிவானி கையில் பாதிக்கப்படுகிறது. பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி ஷிவானி எப்பொழுதும் தனியாக இருப்பதாக சொல்கிறார். அதற்கு ஷிவானி தான் பிறருடன் சகஜமாக சிறிது காலம் ஆகும் என சொல்கிறார், இறுதியாக சனம்ஷெட்டி ‘ immaturity’ என்னும் வார்த்தையை ஷிவானி மீது உபயோகிப்பதாக காட்சி உள்ளது.
ஆனால் ப்ரோமோவை சீரியசாக காட்டி நிகழ்ச்சியை சிம்பிள் ஆக முடிப்பது ஒன்னும் புதிதல்ல என்ன தான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




