சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்புவின் கடைசி படமானது வந்த ராஜாவா தான் வருவேன் என்ற படம் வெளியானது. பிறகு அவர் ஒரு மாநகரம் என்ற படம் வெளியாக வேண்டி இருந்தது. பின்னர் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. இன்னும் மாரநகரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை இந்நிலையில் சற்று தினங்களுக்கு முன்பு சுசீந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய அடுத்த படத்தில் ஹீரோ சிம்பு என பதிவிட்டு இருந்தார்.
இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிம்புவை வைத்து இயக்கப்போகும் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் கதாநாயகியாக நடிக்க நிதி அகர்வால் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஜெயம்ரவி ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்குகிறது.
மேலும் 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து உடனடியாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறார்.