மீனவர் ஒருவர் பத்தாண்டு காலமாக அற்புதமான நண்பராக இருக்கிறார்..ஒவ்வொரு நாளும் அவரைப் பின்தொடரும் ஒரு பார்வையற்ற நீர்நாய்க்கு!
நிக்கோலஸ் லூயிஸ் முதன்முதலில் ஷானா என்ற நீர்நாயை 2010 இல் ஒரு குட்டியாக சந்தித்தார். ஏதாவது உணவு இருக்கிறதா என்று பார்க்க, தன தலையை நீட்டி இருக்கிறது.
41 வயதான நண்டு மற்றும் இரால் மீனவரான நிகோலஸ், அந்த நீர்நாயை தனது சொந்தக் குழந்தையைப் போலவே உணர்கிறாராம், அவர் ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கிறார், “அவளை மிகவும் நேசிக்கிறேன்” என்று கூறுகிறார்.
ஷானா, தினமும் மதிய வேளைகளில், 2-3 மீன் சாப்பிட்டு, அவரது ஏதேனும் ஒரு படகைப் பின் தொடர்வதை வழக்கமாக வைத்திருந்தது.
சமீபத்திய காலங்களில் அவர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது, ஏனெனில் அதன் உடல்நிலை சரியில்லாததால் காயங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
முன்பை விட அதிக பொறுப்பு இருப்பதாக இப்போது உணர்கிறேன் என்று அவர் கூறினார்
இந்த அன்பு அலாதியானதே!