சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றுகொல்கத்தா அணியுடன் இன்று மோதவுள்ளது.
நடப்பு ஐபிஎல் -2020 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்புடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.
இந்ந்தப் போட்டு இன்றிரவு 7-30 மணிக்குத் தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை விளையாடிய 5போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளது.
தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா அணி 4போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்:ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 13 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
தோனி என்ற தலைமை உள்ளதால் சென்னை அணி தெம்பாகவே உள்ளது. கொல்கத்தா அணியில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால் சென்னையை வீழ்த்த வாய்ப்புண்டு.