மத்திய அரசு பொழுது பூங்காக்களை திறக்க வழிகாட்டு முறைக வெளியிட்டுள்ளது.
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள இந்தக் கொரோனா தொற்று வேறுபாடில்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது.
உலகப் பொருளதாராம் ஒருபக்கம் மந்த நிலை காணப்பட்டாலும்கூட மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 200 நாட்களுக்கு பொது ஊரடங்கு இருந்த நிலையில் தற்போது 5 வது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்காக வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், நீச்சல்குளம் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பூங்காவில் உள்ள உணவுக் கூடங்களில் 50% பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டுமெனவும், பொழுதுபோக்குப் பூங்காவிற்கு வருகின்ற பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது