பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடகா போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 11 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறா. ர் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இவர் பல சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் பல கருத்துக்களை வெளியிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து நடிகை ரனாவத் விமர்சனம் செய்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தம் உள்ளிட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள்” என்று கூறி இருந்தார். இதற்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் துமகூரு மாவட்டம் கியாத்தசந்திரா பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் , நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துமகூரு நீதிமன்த்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த புகார் மனுவின்பேரில் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்யக்கூறி கியாத்தசந்திரா போலீசாருக்கு துமகூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கியாத்தசந்திரா போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.