திருப்பதில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் தவித்துவரும் நிலையில், திருப்பதி மாநகராட்சிக்கு உட்பகுதியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தொற்று வேகமாக பரவிவருகிறது. திருப்பதி கோவில் அர்ச்சகர் 18 பேர் உட்பட இதுவரை 2,276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மேலும் பலருக்கு தொற்று ஏற்படாத வகையில் இன்று முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலம் திருப்பதில் சாமி தரிசனத்திற்கு கவுண்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச டோக்கனும் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்ட் 5-ம் தேதி வரை ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான சாலை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதோடு சாமி தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.