மும்பை அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து மும்பை அணி சார்பில் பொல்லார்ட் மற்றும் கோல்டர் நைல்லின் விஸ்வரூபத்தால் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்காக மும்பை அணி வழங்கியது.
177 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் கேப்டன் ராகுல்,அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் இருவரும் சிறப்பான தொடக்கம் தர,பஞ்சாப் அணியின் ஸ்கோர் 3 ஓவர்களில் 30 ரன்களை கடந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகர்வால் பும்ரா வீசிய 4 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி அதிரிச்சி அளிக்க,அடுத்து வந்த கிறிஸ் கெயில் 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.கே.எல்.ராகுலுடன் இணைந்த பூரன் களம் இறங்கியது முதலே அதிரடியை வெளிப்படுத்த,12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 105 ரன்கள் பெற்று இருந்தது.13 வது ஓவர் பும்ரா பந்து வீசி அடித்து ஆடிய பூரனை(24 ரன்கள்,12 பந்துகள்) வெளியேற,அடுத்து ராகுல் சகார் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் முதல் பந்தே சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை கடந்தார்.
அதே ஓவரில் மேக்ஸ்வல் டக் அவுட் ஆகி நடையைக்கட்ட,அடுத்து வந்த தீபக் ஹூடா பும்ரா வீசிய 16 வது ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். கேப்டன் ராகுல் தன் பங்கிற்கு அடுத்த ஓவரில் ஒரு பௌண்டரியை ஓட விட,பஞ்சாப் அணிக்கு 18 ரன்களில் 27 ரன்கள் தேவையாக இருந்தது.18 வது ஓவரில் பஞ்சாப் அணிக்கு ஒரே நம்பிக்கையாய் இருந்த கே.எல்.ராகுல்(77 ரன்கள்,51பந்துகள்) பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆக,அடுத்த ஓவர் வீசிய கோல்டர் நைல் பந்தில் தீபக் ஹூடா மற்றும் ஜார்டன் தலா ஒரு பௌண்டரிகளை ஓட விட்டனர்.கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணிக்கு தேவை என்ற நிலையில் வந்து வீச வந்தார் போல்ட்.அடுத்த 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க,1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜார்டன் ஒரு ரன் மட்டுமே அடித்து சமன் செய்தது.
சூப்பர் ஓவரும் சமன் ஆக,மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் :
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களம் இறங்கினர்.
பஞ்சாப் அணியில் ஜார்டன் வீசிய சூப்பர் ஓவர் பந்துகள் முறையில் பின்வருமாறு:
முதல் பந்து – பொல்லார்ட் (1 ரன் )
2ம் பந்து – வைடு
2ம் பந்து – ஹர்திக் பாண்டியா ( 1 ரன் )
3 ம் பந்து – பொல்லார்ட் ( பௌண்டரி )
4 ம் பந்து – வைடு
4 ம் பந்து – பொல்லார்ட் (1 ரன்,பாண்டியா ரன் அவுட் )
5 ம் பந்து – பொல்லார்ட் ( ரன் இல்லை )
6 ம் பந்து – பொல்லார்ட் ( 2 ரன்கள் )
மொத்தம் : 11 ரன்கள்
12 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி சார்பில் சூப்பர் ஓவர் விளையாட கிறிஸ் கெயில் மற்றும் அகர்வால் களம் இறங்கினர்.
மும்பை அணியில் போல்ட் வீசிய சூப்பர் ஓவர் பந்துகள் முறையில் பின்வருமாறு:
முதல் பந்து – கிறிஸ் கெயில் ( ஒரு சிக்ஸர் )
2ம் பந்து – கிறிஸ் கெயில் ( 1 ரன் )
3 ம் பந்து – அகர்வால் (பௌண்டரி)
4 ம் பந்து – அகர்வால் (பௌண்டரி)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் வெற்றி.




