ஸ்பைஸ்ஜெட் 62 புதிய விமான சேவையகளை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.
தனியார் துறையை சேர்ந்த விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் 62 புதிய சேவைகளை தொடங்கியுள்ளது. அதன்படி புனே-சென்னை-புனே , மதுரை-புதுதில்லி-மதுரை, ஓமன் தலைநகரான மஸ்கட்-புதுதில்லி , மஸ்கட்-அகமதாபாத் உள்ளிட்ட வழித்தடங்கள் இடையே புதிய விமான சேவையையும் , உள்நாட்டு வழித்தடங்களான ஹைதராபாத்-மும்பை, கொச்சி-கொல்கத்தா உள்ளிட்ட தடங்களின் இடையே புதிய பயணிகளுக்கான விமான சேவையையும், சென்னை-கொல்கத்தா இடையே கூடுதல் சேவையையும், தில்லி-கொல்கத்தா, தில்லி -வாராணாசி உள்ளிட்ட தடங்களில் கூடுதல் பயணிகளுக்கான விமான சேவை உள்ளிட்ட 62 புதிய சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அவ்வாறு 58 புதிய விமான சேவைகளை உள்நாட்டு வழித்தடங்களிலும் , 4 புதிய விமான சேவைகளை சர்வதேச வழித்தடங்களிலும் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் மேற்க்கூறிய வழித்தடங்களில் போயிங்737 , பொம்பார்டியர் கியூ400 ஆகிய விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா தெரிவித்துள்ளார்.