சீன நகரம் ஒன்றில் அறிகுறியே இல்லாமல் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது.

இன்று உலகையே ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் இந்த கொரோனாவின் தோற்றம் அனைவரும் அறிந்தது தான். சீனா வின் பரிசுதான் இந்த கொரோன. இது நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி இப்போது உலகையே முடக்கி போட்டுவிட்டது. ஆனால் கடைசியில் சீனா இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனாலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிவிடவில்லை.
இந்த நிலையில் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கர் நகரில் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா அங்குள்ள மொத்த ஜனத்தொகையான 47 லட்சம் பேருக்கும் ஒரே வாரத்தில் கொரோன பரிசோதனை செய்ய வேண்டும் என சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் வரை 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யாருக்கும் காரோண தோற்று இல்லை என்றும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் உள்ள 19 லட்சம் பேருக்கு இன்னும் பரிசோதனை விரைவில் செய்து முடிக்கப்படும் எனவும் மேலும் தொற்று உறுதி செய்ய படுபவர்களுக்கு தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளது தேசிய சுகாதார ஆணையம்.




