நாடு முழுவதும் நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள, மூன்று புதிய விதிமுறைகள் தொடர்பான விவரங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த, வகையில் மத்திய அரசின் திட்டங்களும் டிஜிட்டல் மையத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, வரும் 1ம் தேதி முதல் டிஜிட்டல் மயமாக்களின் இரண்டு புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.
முதல் விவகாரம், டிஜிட்டல் கட்டணம். அதாவது, ஐம்பது கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் டிஜிட்டல் முறையிலேயே கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், டிஜிட்டல் கட்டணத்திற்கு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
அடுத்ததாக, நவம்பர் 1 -ம் தேதி முதல், எரிவாயு சிலிண்டர் பெற வேண்டும் எனில்,ல் புதிய விதிமுறையின் படி, வாடிக்கையாளர் பதிவு செய்துள்ள செல் போனுக்கு OTP எண் வரும். அதை சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரிடம் காட்டினால் தான் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். மேலும், ஆன்லைன் முன்பதிவுடன் எரிவாயு நுகர்வோர் கட்டணமும் செலுத்த வேண்டும்.
இறுதியாக, எஸ்பிஐ வங்கியில் நவம்பர் 1ம் தேதி முதல் வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, சேமிப்புக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படுவதற்கு 3.25 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படும். அதற்கு மேல் டெபாசிட் செய்தால், அதற்கு ஏற்ப வட்டி மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.