சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடக்கிறது என்று திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிட கழக பொதுச் செயலாளருமான திவாகரன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
சதிகள்
ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு பள்ளி திறப்புகள் குறித்து பேசுவது சரியல்ல. தற்போதையை அமைச்சர்கள் அறிவூபூர்வமாக சிந்திப்பவர்கள் அல்ல. அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து வெளிப்படையாக முடிவு எடுக்க வேண்டும்.
சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளிவருவார். சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டாம் என வலியுறுத்தினேன். சசிகலாவைச் சுற்றி நிறைய சதிகள் நடைபெற்றது.
ஸ்லீப்பர் செல்
ஜெயலலிதா இறந்தவுடன் மூன்று பேர் முதல்வராக வேண்டும் என முயன்றார்கள். சசிகலா ஒப்படைத்த வேலையை எடப்பாடி சிறப்பாக கையாண்டார். சசிகலா குறித்து ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. சசிகலா குறித்து விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தினகரனே ஒரு ஸ்லீப்பர் செல் தான். அவருக்கு ஸ்லீப்பர் செல் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.