சூர்ய குமார் யாதவ்வின் மீது அப்படி என்ன கோபம் பெங்களூர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்களில் தனக்கு சாதகமான வீரர்களை மட்டுமே எடுத்து உள்ளார் என்றும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அது உண்மையாகி வருகிறது.
நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து இருந்தது.அதன் பிறகு களமிறங்கிய மும்பை அணி சூர்யா குமார் யாதவின் அதிரடி அரை சதத்தால் 19.1 ஓவர்களில் 165 ரன்கள் அடித்து வெற்றி கனியை ருசித்ததுஇந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்ய குமார் யாதவ்விற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் போன்றோர் நல்ல பார்மில் இருந்தும் ஏன் அணியில் இடம் பெறவில்லை என்று bcci நிர்வாகம் மற்றும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.
அந்த விமர்சனங்கள் உண்மை தான் என்பது போல நேற்று சூர்ய குமார் யாதவ் 40 ரன்களில் இருந்தபோது அவர் அடித்த பந்தை விராட் கோலி தாவி பிடித்து தடுத்து சூர்ய குமார் யாதவை ஸ்லெஜிங்க் என்ற முறையில் வெற்றுப்பேற்றினார்.அப்பொழுது சற்றும் பொறுமை இழக்காத சூர்ய குமார் யாதவ் பொறுமையை கடைபிடித்தார்.இந்திய அணியின் கேப்டன் கோலியே ஒரு வளர்ந்து வரும் வீரரை இவ்வாறு செய்வது வருத்தமளிக்கிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.