
தொகுப்பாளினியாக இருந்து அதன்பின் மலையாளத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கினார் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதலில் சீனியர் நடிகர்களுக்கு ஜோடி போட்ட நயன்தாரா பில்லா படம் மூலம் இளம் நடிகர்களுக்கு ஜோடி போட ஆரம்பித்தார்.

வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவரை காதலிக்கவும் ஆரம்பித்தார் ஒரு சில காரணங்களுக்காக சிம்பு நயன்தாரா ஜோடி பிரிந்தது, பிறகு பிரபு தேவா இயக்கத்தில் வெளியான வில்லு எனும் திரைப்படத்தில் நயன்தாரா நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபு தேவாவுடன் திருமணம் வரை சென்றார் நடிகை நயன்தாரா.
ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதுவரை இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று யாருக்கும் பெரிதும் தெரியாது.இந்நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா அளித்த பேட்டியில் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார்.

இதில் நயன்தாரா கூறியது :
” நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதே போல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட, தனியாவே வாழ்ந்துவிடலாம். பழைய காதல்களை நான் கடந்துவிட்டேன் “. என்று கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி சிம்புவுடன் நயன்தாராவிற்கு இருந்த காதலை பற்றி திருமணத்திற்கு முன்பு பிரபு தேவா கேட்டது தான் முறிவிற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகின்றது.




