பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரை விவகாரத்தில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்பின்னர் நடைபெற்ற நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.