காலில் விழும் கலாச்சாரத்தை பிக்பாஸ் வீட்டில் நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிக்-பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, நடிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, தொகுப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.வார இறுதியில் பிக்-பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கமல்ஹாசன் பேசுவார். அப்போது அவர்களது நிறை குறைகளை எடுத்துச் சொல்வார். கடைசியாக வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடிகர்ஆரிக்கும் பாலாஜிக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டது. அவ்வப்போது அவர்கள் பிக்பாஸ் வீட்டில் மோதிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.ஆரி ஏதேனும் நல்லது கெட்டது குறித்து அறிவுறுத்தினாலும் அதை பாலாஜி காதில் போட்டு கொள்வதில்லை.
நேற்றைய நிகழ்ச்சியின்போது வெளியேறுபவர்கள் பட்டியலில் இருந்த ஆரியை கமல்ஹாசன் சேஃப் என கூறிட்டு என்ன சந்தோஷமா என கேட்டார். அதற்கு நடிகர் ஆரியோ கண்கலங்கினார்.
அவர் கூறும்போது, “நான் இந்த நிகழ்ச்சியை விட்டு செல்ல வேண்டும் என இருந்தேன். சம்யுக்தாவை நான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. இதற்காக நான் அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து கமல் பேசும்போது, “எதற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும்?
காலில் விழும் கலாச்சாரத்தை ஒழிக்க நான் பாடுபட்டு வருகிறேன். எனவே கையை குலுக்கி மன்னிப்பு கேளுங்கள். இல்லாவிட்டால் கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சற்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டு மன்னிப்பு கேளுங்கள்” என்றார்.
தமிழகத்தில் காலில் விழும் கலாச்சாரம் பிரபலமாக இருந்து வருகிறது. முதல்வர், அரசியல்வாதிகள், தலைவர்கள் செல்லும்போது அவர்களது காலில் தொண்டர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கமாக உள்ளது. இதைத்தான் நடிகர் கமல் நேற்று பிக்பாஸ் வீட்டில் கிண்டல் செய்வது போல கூறியுள்ளார்.