தமிகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைன் வகுப்புக்கு நேற்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருப்பதால் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதையடுத்து ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு நேற்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.