சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் பூவிருந்தமல்லி பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக சிறை காவலாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படியில் சிறையில் உள்ள அணைத்து கைதிகளையும் அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அந்த சிறையில் இருக்கும் முருகன் மற்றும் பாசில் என்பவரிடமிருந்து கஞ்சா மற்றும் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த செல்போன் மற்றும் கஞ்சா அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.