வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பன் பாலத்தில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள புரவி புயல் பாம்பன் பாலத்தில் இருந்து 530 கி.மீ. தொலைவிலும்,திரிகோணமலையிலிருந்து 300 கி.மீ தொலைவிலும் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புரவி புயலானது இன்னும் 6 மணிநேரத்தில் மேலும் வலுவடையும் எனவும்,இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் திரிகோணமலை அருகே கரையை கடந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது.
12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், கரையை கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று பலமாக வீச வாய்ப்பு உள்ளது.மேலும் நாளை மறுநாள் அதிகாலை வேளையில் குமரி மற்றும் பாம்பன் பாலம் இடையே புரவி புயல் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.