பிரேசிலில் Money Heist என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் பாணியில் கொள்ளையடித்த பணத்தை ஒரு கும்பல் சாலையில் வீசி சென்றுள்ளது.
பிரேசிலின் தென் பகுதி நகரமான க்ரிஷியுமாவில் பயிற்சி பெற்ற கொள்ளையர்களால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பல இடங்களில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அங்கு வந்த போலீஸார் மீது கொள்ளையர்கள் நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இவ்வாறாக கொள்ளையடிக்கும் முறையை Novo Cangaco என்று குறிப்பிடுகின்றனர். போலீஸிடம் இருந்து தப்பி சென்ற கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை சாலைகளில் வீசி சென்றனர். இதைப்பார்த்த அங்கிருந்த சிலர் அந்தப் பணத்தை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைராலானது. இதையடுத்து, பணத்தை எடுத்தவர்களில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : எகிப்து பிரமிடு அருகே கவர்ச்சி போஸ் கொடுத்த மாடல் அழகி கைது..