ஜப்பானின் கவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 பைக் மாடல், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் முதல் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, மெகுரோ நிறுவனத்துடன் இணைந்து அதனை சிறப்பிக்கும் வகையில் கவாசகி நிறுவனம் கே3 பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடல் கவாசகி டபிள்யூ800 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் மாடல் தோற்றத்தில் மெகுரோ கே3 மாடல் டபிள்யூ800 போன்றே காட்சியளிக்கிறது. மேலும், பியூவல் டேன்க் மற்றும் பக்கவாட்டில் மெகுரோ பேட்ஜிங் செய்யப்பட்டு அதன் பழைய தோற்றம் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் பியூவல் டேன்க் மீது பின்-ஸ்ட்ரிப்பும் செய்யப்பட்டு உள்ளது.
கே 3 ரெட்ரோ ஸ்டைலிங் பைக்கில் ஒரு சுற்று வடிவ முகப்பு விளக்கு, டெயில்லாம்ப் மற்றும் இன்டிகேட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பைக்கின் ரெட்ரோ தோற்றத்தை சேர்க்கும் இரட்டை-பாட் அரை டிஜிட்டல் கருவி கிளஸ்டரையும் கொண்டுள்ளது. 227 கிலோ எடையுள்ள இந்த பைக், 15 லிட்டர் எரிபொருள் டேங்குடன் ஒற்றை இருக்கை வசதியை கொண்டுள்ளது.
5 ஸ்பீடு கியர் பாக்சுடன் மெகுரோ கே3 மாடலில் 773சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 51 பிஹெச்பி பவர், 62.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கவாசகி டபிள்யூ800 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.