கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
கடலூர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த வாரங்களில் நிவர் மற்றும் புரவி புயலால் பல மாவட்டங்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடலூர் மாவட்டம் மிகுந்த சேதங்களை சந்தித்தது. இந்த பாதிப்புகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் ஏற்கனவே பார்வையிட்டிருந்தனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
முதல்வர் ஆய்வு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுக்கம்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களைப் பார்வையிட்டார். மேலும் பாதிப்படைந்த நெடுஞ்சாலைகளையும் பார்வையிட்டார். பின்னர், காட்டுமன்னார்கோவில். சிதம்பரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் நேரில் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.