வாட்ஸப்பில் இனி கட்டணம் செலுத்தலாம் என வாட்ஸப்பே அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸப்.
வாட்ஸப் தனது அடுத்த அதிரடி அப்டேட்டை கொடுத்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் இனி வாட்ஸப் மூலமும் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
இந்தியா முழுவதும் வாட்ஸப் பயன்படுத்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான பயனாளர்களுக்கு இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸப் தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார்.
வாட்ஸப் பேவுடன் ஸ்டேட் பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை வாட்ஸப்புடன் இணைந்து செயல்பட இருக்கிறது. தேசிய பணம் வழங்கல் கார்ப்பரேஷ்ன் அமைப்பின் யுபிஐ முறையில் வாட்ஸப் அப் நிறுவனம் தனது பே வசதியை கொடுக்கும் எனவும் இதற்கான அனுமதி தங்களுக்கு கடந்த நவம்பர் மாதமே மத்திய அரசு கொடுத்து விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE- அசத்தல் வசதிகளுடன் ஆப்பிளின் புதிய ஐபேட்!
இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணவர்த்தனை முறை மேலும் மேம்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.