அன்பு வாசக உள்ளங்களுக்கு வணக்கம். இலக்கிய வாசகர்கள் இணைந்து இலக்கியம் படைக்கும் தருணம் இது. சாகித்ய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோரின் நேர்காணல்கள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் இசை, கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோரின் கவிதைகள், எழுத்தாளர் நீலா, பேச்சாளர் மானசீகன், மயிலன் சின்னப்பனின் சிறுகதைகள், சுந்தரராஜன், திருப்பதி வாசகனின் கட்டுரைகள் மற்றும் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் என ஏழிலைப்பாலை எனும் பொங்கல் மலர் தயாராகி வருகிறது. ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர்.
ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் அட்டைப்படத்தை அலங்கரிக்கிறது. உங்கள் ஊர் நூலகத்திற்கு நீங்கள் இந்நூலை பரிசளிக்க விரும்பினால் ஒரு நூலுக்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்தால் போதும். ஒரு நூல் உங்களுக்கு. ஒரு நூல் உங்கள் ஊர் நூலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி வைப்போம்.
Read more – தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய விடைத்தாள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுங்கள். புத்தகங்களை முன்பதிவு செய்ய : 9944041999 (முன்பதிவு விலை 250/-)