பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகிதம் இடம் வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தினூடே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக்குவேன், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணியினர் கூட்டம், மாதர் சங்கமம் என்ற பெயரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கமல்ஹாசன், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் காரணம் ஆடைதான் என்று முடித்துவிடுகிறார்கள். பெண்கள் துணி உடுத்துவதைப் பார்த்து மனம் கெட்டுவிடுவதால் வன்கொடுமை உள்ளிட்டவை நிகழ்வதாகக் கூறுகிறார்கள் என்றார்.
“, சாமிகூடத்தான் குறைவான ஆடை அணிந்திருக்கு, அதில் சில சாமி ஆடையில்லாமல் கூட இருக்கிறது. அப்போ தோன்றாதது, நம் சகோதிரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் விதியை பெண்கள் மட்டுமே நினைத்தாலே மாற்ற முடியும்” என்று கூறினார்.
read more: எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது பண விவசாயம்தான்: ஸ்டாலின்
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 50 சதவிகித இடம் வழங்கப்படும். அதற்கு அதிகமான பெண்கள் கட்சியில் இணைய வேண்டும் என்றவர், அதற்கு முன்பு வழக்கறிஞர் அணி கூட்டத்திலும் கலந்துகொண்டார். அங்க், “நான் சினிமாவிலேயே நேர்மையை விட்டுக் கொடுக்காதவன். கருப்பு பணத்தை ஊதியமாக பெறாத ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவன். உச்ச நீதிமன்றத்தை எளிய மனிதர்களும் அணுகும் வகையில் தமிழகத்தில் டிஜிட்டல் நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என்று அங்கு தெரிவித்தார் கமல்.