மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 26.12.2020,நல்ல நேரம் :காலை 7.45-8.45,மாலை 4.45-5.45,
ராகுகாலம் மாலை 9.00- 10.30,எமகண்டம் நண்பகல் 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
குடும்பத்தின் உதவியால் உங்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். வேலை பார்க்கும் நிறுவனங்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படும். மிக நீண்ட நாட்கள் தொடர்ந்த கடன் பிரச்சனை முடிவடையும். குழந்தைகளின் கல்வி சம்மந்தமான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம் :
இரத்த பந்தங்களுடன் சொத்து விஷயத்தில் சிறு மனக்கசப்பு ஏற்படும். வியாபாரத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வதால் மிக பெரிய லாபம் கிட்டும். பெற்றோர்களுடன் ஆசிர்வாதம் பெற்று புதிய தொழிலில் ஈடுபடுவது நல்லது.
மிதுனம்:
தீடிரென சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எடுத்த காரியங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. வரவு செலவு கணக்குகளில் சற்று கவனமுடன் இருந்தால் நல்லது.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும்.
கடகம்:
நெருங்கியவர்களிடம் பேசும்போது கவனமாய் பேசுதல் நல்லது. தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டு அதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தொழில் விஷயத்தில் பிறரை நம்பாமல் நீங்களே முன்னெடுத்து இயங்கினால் நல்லது.சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எளிதில் காரியங்கள் நிறைவேறும்.
சிம்மம்:
குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான ஆரோக்கியமான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களால் சில மனசங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கன்னி:
காலை விடிந்தது முதல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வாக காணப்படுவீர்கள். முடிந்த அளவு வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலை பளு குறையும்.
துலாம்:
தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும்.நிதி சம்பந்தமான விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் மிக கவனம் தேவை. எதிர்காலத் திட்டங்களை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நாளாக அமையும்.
விருச்சிகம் :
பொழுதுபோக்கு விஷயங்கள் சிறிது ஈடுபடும் பொழுது வீண் செலவுகளால் உண்டாகும். பயணத்தின் போது கவனமாய் இருந்தால் நல்லது. தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.
தனுசு :
வாகன மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு. தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும். பண பொருளாதாரம் கொஞ்சம் மந்தமாக காணப்படும்.
மகரம்:
குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து காரியத்தை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரு சில விஷயத்தில் தீர யோசனைக்கு பிறகு இயங்குவது நல்லது.
Read more – புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு
கும்பம்:
குடும்பத்தில் பொறுப்புகளுடன் செயல்பட்டால் கடன் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்தடையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் மேலோங்கும். கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மீனம்:
உங்களின் சுவாரசியமான பேச்சுகளால் எளிதில் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்க ஆர்வமாக இருப்பீர்கள். .சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய உக்திகளை கையாளுவீர்கள்.உங்கள் பணிகள் மற்றும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.




