பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ரம்யா மற்றும் ஷிவானி ஆரியை குறித்து பேசி கொண்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் ரம்யா மற்றும் ஷிவானி ஆரியை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள்.
இதில் ரம்யா, ‘ஆரி எல்லா விஷயங்களும் சரியா பண்ணனும் அப்படின்னு நினைக்கிறவர். ஆனா, இது மக்களுக்கு பிடிச்சிருக்கா அப்படிங்கற குழப்பம் எப்பயுமே எனக்கு இருக்கு. நேத்து காலர் பேசின போது கூட ஆரிய பிடிச்சிருக்கு அப்படிங்கற மாதிரி எந்த இடத்துலயும் சொன்ன மாதிரி தெரியல’ என சொல்கிறார்.
READ MORE- ஆரியால் கடுப்பான பாலா! #BiggbossPromo1
இதை கேட்டு ஷிவானி, ‘க்ரூப்பிஸம் இது போல சில விஷயங்கள் இருப்பதை எல்லாம் கரெக்ட்டா சொல்லறாரு. ஆனா, அவருக்குன்னு ஒன்னு வரும்போது செல்ஃபிஷா மத்தவங்கள ப்ளேம் பண்ணறாரு. தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜக்ட் பண்ணிடறாரு’ என சொல்ல அதற்கு ரம்யாவும் ‘கிடைக்கிற இடத்துல எல்லாம் தன்னுடைய ப்ளஸ்ஸையும் மத்தவங்களோட மைனஸ்ஸையும் சொல்லறாரு’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.
போன வாரமும் இதேபோலதான் அனிதாவோட சேர்ந்து அவரது தப்பை எல்லாம் சப்போர்ட் செய்து அவரை வெளியே அனுப்பினார் ரம்யா. இப்போது ஷிவானி. ஒருவேளை ரம்யா ஆரியின் ஸ்லீப்பர் செல்லா என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.




