கொரோனா வைரஸ் தொற்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்
நாம் ஆரோக்கியமுடனுன், உற்சாகமுடனும் இருந்தால்தான் நம்மை சுற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கு பதிலாக சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI கூறியுள்ளது. அதற்கேற்ற சில உணவுகளையும் பரிந்துரைத்துள்ளது. ஆரஞ்சு,நெல்லி, பப்பாளி, கேப்சிகம், கொய்யாப்பழம், எலுமிச்சை ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதில்மேலும் ஒளிந்திருக்கும் சில மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்
ஆரஞ்சு பழம் தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த கனியிலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது இதில் வைட்டமின் சி மட்டுமல்லாமல் ஆன்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன..கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கும் கேப்சிகம் நல்லது. குடைமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யாபழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூலஆதாரமாக விளங்குகின்றது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது உதவும். இதயம் சம்பந்தமான நோய்கள், தசைபிடிப்பு பிரச்னைகளை சரிசெய்ய இந்த பழத்தை சாப்பிடுங்கள். குறிப்பாக மாதவிடாய் வலி ஏற்படாமல் தடுக்க கொய்யாப்பழம் நல்ல பலன்களை தரும்..
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.