சாலையில் ஓடிய முட்டை கழிவுகள் – தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம் செய்த காவலர்கள்!!!
மதுரை மாநகரம்¸ தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே முட்டை ஏற்றிவந்த வாகனம் விபத்துக்குள்ளாகி சுமார் 5000த்திற்கு மேற்பட்ட முட்டைகள் விழுந்து¸ சாலையில் பசை போல் ஒட்டியது. இதனால் அந்த சிக்னலில் நிற்கும் வாகனங்கள் வழுக்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவலர் திருமதி. மீனா அவர்கள் தனது கைகளால் அக்கழிவுகளை சுத்தம் செய்துள்ளார். அவ்வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் பெண் காவலரின் செயலை கண்டு கழிவுகளை அகற்ற உதவினர். காவலர்களின் இச்செயல் பொதுமக்களிடம் பெரும் பாராட்டை பெற செய்துள்ளது.