சென்னையில் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. தற்போது வரை சென்னையில் மட்டும் 93,37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 1989 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
எனவே இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுவருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகளை திறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. ஆனால் அரசின் உத்தரவினை மீறி கடைகள் செயல்படுவதால் தொற்று வேகமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவினை மீறி செயல்படும் அனைத்து பெரிய கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.