‘சூது கவ்வும்2’ல் சத்யராஜ் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ல் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சூதுகவ்வும்2’.
படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்க தற்போது பார்ட்2-வை ‘யங் மங் சங்’ இயக்குநர் அர்ஜூன் இயக்குகிறார். முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.
இந்த படம் விஜய்சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்த நிலையில், சில காரணங்களால் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விஜய்சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
READ MORE-‘மாஸ்டர்’ருடன் ‘தங்கம்’ காளிதாஸ்!
கருணாகரன், காளி வெங்கட் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.