ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விஹாரி, பும்ரா விலகியுள்ளனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த ஒரு வாரமாக சிட்னியில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 15 ம் தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது. 3 வது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஹனுமான் விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் விலகியுள்ளனர்.
Read more – பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு இணையத்தில் பதிவு : சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது
ஏற்கனவே, கடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் மற்றும் கே.எல். ராகுல் விலகிய நிலையில் தற்போது ஹனுமான் விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் விலகியுள்ளனர். மேலும், இந்திய அணியின் ஆல்- ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா, விக்கெட் கீப்பர் பண்ட் ஆகியோர் காயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.