மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு விடுமுறையால் காணும் பொங்கலுக்கு எங்கும் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழர்கள் பொங்கல் திருநாளில் மூன்றாம் நாள் திருவிழாவாக காணும் பொங்கல் அன்று நீர் நிலைகள் அருகிலும், இயற்கை சூழலில் குடும்பமாக கூடி கட்டு சாப்படுகளை பரிமாறி நாள் முழுவதும் இன்பம் பொங்க பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்தமுறை சென்னை மற்றும் புறநகர்வாசிகளின் காணும் பொங்கல் கானல் பொங்கலாக மாறிபோனது. கொரோனா தடைக்காலம் என்பதால் மெரினா கடற்கரை, வண்டலூர் மற்றும் கிண்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட தனியார் பொழுதுபோக்கு மையங்களுக்கும் விடுமுறை என அரசு அறிவித்த நிலையில் பல்வேறு தரப்பினர் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என எண்ணி நேரில் சென்று ஏமற்றம் அடைந்தனர்.
இதுபோல் வடமாநிலத்தவர்களும் சுற்றுலா மையங்களுக்கு வந்து திரும்பி செல்லும் நிலைதான் காணப்பட்டது. ஆக மொத்தம் காணும் பொங்கலாக இல்லாமல் கானல் பொங்கலாக மாறி ஏமாற்றம் அடைந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். நடைப்பாதை வியாபாரிகளும் வியாபாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.