பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்டெடுக்க அந்தநாட்டில் உள்ள மிகப்பெரிய பூங்காவை அடமானம் வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்டெடுக்க அந்தநாட்டில் உள்ள மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டதால் பாகிஸ்தானில் அந்நிய செலவானியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் முயற்சியாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள எப் 9 (F-9) பூங்காவை பிரதமர் இம்ரான் கான் அடமானம் வைக்க திட்டமிட்டுள்ளார்.
Read more – “எய்ட்ஸ் நோயாளி” என்று தெரிந்தே தான் காதலித்தேன் : காவல் துறையினரை அதிரவைத்த 17 வயது சிறுமியின் வாக்குமூலம்
மேலும், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் (நாளை) செவ்வாய் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.