தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு பயிற்சி இல்லாத நர்ஸ் ஊசி மூலம் அளவு தெரியாமல் ஓவர் டோஸ் செலுத்தியதால் பரிதாமாக உயிரிழந்தது.

தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடுத்த கொல்லங்கிணறு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மாடசாமி- வெயிலாட்சி .இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகிழரசன் என்ற குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 27 ம் தேதி தீடிரென மகிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தையை அருகில் உள்ள கோகுலம் கிளினிக்கில் அனுமதியுள்ளனர்.
அந்த சமயத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் அங்கு பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு குழந்தைக்கு நள்ளிரவில் உடல் நடுக்கம் ஏற்பட்டு, வலிப்பும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நர்ஸ்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், மருத்துவரை அழைக்குமாறு பெற்றோர்கள் வலியுறுத்திய பின்பும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
Read more – திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும் : மு.க. ஸ்டாலின்
அடுத்த நாள் காலை மருத்துவர்கள் வந்து அந்த குழந்தையை பரிசோதனை செய்தபிறகு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முறையாக பயிற்சி பெறாத நர்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் போராட்டம் நடத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், கோகுலம் கிளினிக் சார்பில் குழந்தைக்கு முறையான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது என்றும், இதுகுறித்த விவரங்களை காவல் நிலையத்தில் சமர்பித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.




