இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற இந்திய பயணி ஒருவர் 3200 வயாகரா மாத்திரையுடன் சிகாகோ விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
சிகாகோ :
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இந்திய பயணி ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் இவர் கொண்டுவந்த பையை ஸ்கேன் மூலம் சோதனை செய்துள்ள போது அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இந்திய பயணியிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளார். காவல் துறையினர் அவர் பையை திறந்து பார்த்தபோது அதில் கொத்து கொத்துக்காக வயாகரா மாத்திரை இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 70 லட்சம் மதிப்புள்ளதாகவும், 3200 வயாகரா மாத்திரைகள் அதில் இருந்ததாகவும் தெரிகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 07.02.2021!!!
மீண்டும் காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அந்த நபர் இந்த வயகாரா மாத்திரைகள் குறித்து போதுமான விளக்கத்தை கூறவில்லை. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்து யார் இவ்வளவு மாத்திரைகளை கொண்டு வர ஏற்பாடு செய்தனர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.