இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தன்னுடைய வயதைக் காட்டிலும் 20 வயது அதிகமானவர் போல பீல்டிங்கில் செயல்படுகிறார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் புட்சர் கிண்டலடித்துள்ளார்.
சென்னை :
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜோ ரூட் இரட்டை சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸ், டோம் சிப்லே ஆகியோர் அரைசதமடித்து உதவியால் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் அடித்து ஆள் அவுட் ஆனது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பீல்டிங் மிக மோசமானதாகவே இருந்தது. மேலும், பல கைக்கு வந்த கேட்ச்களையும் தவறவிட்டனர். இந்நிலையில், இது குறித்து பேசிய மார்க் புட்சர் கூறியதாவது :
Read more – எரிவாயு சிலிண்டர் மூலம் 2 குழந்தைகளை எரித்து கொன்று தாயும் தற்கொலைக்கு முயற்சி..
இந்திய அணியில் அஸ்வின் மிகச்சிறந்த பீல்டர் இல்லை. அவர் மற்றவர்களை காட்டிலும் பீல்டிங்கில் மிகவும் மெதுவாக செயல்படுவார். எனக்கு எப்போதும் இவர் 20 வயது அதிகமுடையவர் போலவே தோற்றமளிக்கிறார். அவரின் பீல்டிங் செயல்பாடுகளும் அப்படிதான் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் அஸ்வின் ஏராளமான ஓவர்களையும் வீசி சோர்வுடன் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் அஸ்வின் வீசிய ஓவர்களை விளாசி தள்ளியபோதும் அவரின் விக்கெட்டை சிரமப்பட்டு வீழ்த்தினார்” என்று தெரிவித்துள்ளார்.