எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவிற்கு தான் மிக பெரிய எழுச்சி உள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது ;
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின் போது சில அரசியல் கட்சிகள் மதத்தின் அடிப்படையில் வாக்குகளை சேகரிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவர் பா.ஜ.க கட்சியை சொல்லவில்லை. ஒரு வேளை முஸ்லீம் லீக் கட்சியை குறிப்பிட்டு இருக்கலாம் என்றார்.
அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் தற்போது தமிழக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவர் தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். திமுக பொய் பிரச்சாரங்களை தெரிவித்து ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறது. அதிமுகவும் தமிழக அரசும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
Read more – சசிகலா விடுதலை தட்சணை.. அதிமுக கூட்டணியில் இதுவரை இல்லை பிரச்சினை.. எச்.ராஜா
யாரோ அதிமுகவின் நடவடிக்கைகளை திமுகவிற்கு தகவல்களாக கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும், சசிகலா தமிழகத்திற்கு வந்தபோது மிக பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கிறேன் என்றார். எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவிற்கு தான் மிக பெரிய எழுச்சி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




