மக்கள் விரும்பும் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு என் நன்றிகள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை :
தூத்துக்குடி மாவட்டத்தில் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மீண்டும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிறகு அவர் பேசுகையில், மக்கள் நீதி மய்யம், ஐஜேகே மற்றும் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி உறுதியாகி விட்டது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டணியில் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், எங்கள் கூட்டணி கொள்கை ரீதியாக ஒன்றாக இணைந்தது என்றும் சமத்துவம் இல்லையேல் நாடு வீணாய்போகும் என்றார்.
Read more – தானாக தள்ளுபடியாகிறது நகைக்கடன்… மாறுகிறது மக்களின் மனம், இதுவே எடப்பாடியின் குணம்..
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி படலத்தை பதிவு செய்தார் .அதில், மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் 3 நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




