தெருக்குரல் அறிவின் குரலில் ’enjoy enjaami’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். இன்று இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
’கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டு வரும் இப்பாடல் விரைவில் யூடியூப்பில் வெளியிடப்படும்’ என்று சந்தோஷ் நாராயணன் அறிவித்திருக்கிறார். அவர் கூறியது போலவே பாடலின் போஸ்டரில் தீயும் தெருக்குரல் அறிவும் கண்களை ஈர்க்கும் விதமாக கலர்ஃபுல்லாக ஃபோஸ் கொடுக்கிறார்கள்.
தீயின் தித்திக்கும் குரலும் அறிவின் ஆட்கொள்ளும் குரலும் இணைந்து பாடலை கேட்பவர்களை ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்பக் கேட்டு எஞ்சாய் செய்ய வைக்கிறது. ஆடியோவே, இப்படியென்றால் வீடியோ வெளியாகும்போது இளைஞர்கள் தேடித்தேடி பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.