நாம் அனைவருமே சின்ன வயதில் காக்கா கல்லைத் தூக்கிப்போட்டு தண்ணீர் குடித்த கதையை கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடக்க அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது.
ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது.
உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.
அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஓருமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு என தமிழில் பிரசித்திபெற்ற வார்த்தை உண்டு.
அது இங்கே ஒரு காகம் அதேபோல் செய்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கேரளத்தில் ஒரு மீன்கடை இருக்கிறது. அங்கு அவர் மீன்களை குவித்துப்போட்டு விற்றுக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு காகம் வந்தது.
அந்த காகம் மீன் குவியலின் முன்பு நின்று கொண்டு ஏதோ மக்கள் மீன் வாங்குவதைப் போல காத்து நின்றது. கடைக்காரர் சில மீன்களை அதன் வாயில் கொடுக்க அது வேண்டாம் என்பது போல் அதை நிராகரித்தது.
ஒருகட்டத்தில் ஒரு நல்ல மீனை அதுவே தேர்ந்தெடுத்தது. இந்தக்காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்.