கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் ‘திரெளபதையின் முத்தம்’ படக்குழு தேதி அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் வெளியானது. தற்போது காதலை போற்றும் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பாடலின் போஸ்டரே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
ஏற்கனவே, கண்டா வரச் சொல்லுங்க பாடலும், பண்டாரத்தி புராணம் பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. பாடலும் கேட்பதற்கு மட்டுமல்லாமல் பாடல் எடுக்கப்பட்ட விதமும் பலருக்கும் பிடித்தமாக இருந்தது.
கண்டா வரச் சொல்லுங்க பாடலில் அந்த ஓவியம், பண்டாரத்தி புராணம் பாடலில் தனுஷ், லால் ஆகியோரின் வெறித்தனமான நடிப்பு ஆகிவையும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தது. அதேபோன்று திரௌபதியின் முத்தம் பாடலிலும் ஏதேனும் மேக்கிங் ஸ்பெஷல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.