பத்மராஜன் மேட்டூர் மற்றும் எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட 216 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி :
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த பத்மராஜன். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் தற்போது பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், எம்.எல்.ஏ., எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் முக்கிய பிரமுகர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டுள்ளார்.
மேட்டூர் மக்கள் தொடர்ந்து இவரை ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கவிடுகின்றனர். இதுவரை பத்மராஜன் தேர்தலில் போட்டியிட 216 வது முறையாக பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Read more – கடமை வரும் வரை காத்திரு… வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்..
இதுவரை பத்மராஜன் எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.