மார்வெல் காமிக்ஸின் புகழ் பெற்ற வில்லன் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக வைத்து வெளியானப் படம் ‘வெனம்’. 2007ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படத்தில் ‘வெனம்’ கதாபாத்திரம் அறிமுகம் ஆனாது.
அதன் பின் ஸ்பைடர்மேனின் பிரதான எதிரிகளில் ‘வெனம்’ கதாபாத்திரமும் ஒன்றானது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு ரூபென் ஃப்ளெஸ்ஷர் இயக்கத்தில் ‘வெனம்’ திரைப்படம் வெளியானது. இதில் டாம் ஹார்டி, மிச்செல் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ரூபன் ஃப்ளெஸ்ஷர் இப்படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதில். ஆன்டி செர்கிஸ் இயக்கி வருகிறார்.
டாம் ஹார்டியே வெனம் 2 படத்திலும் நடித்து வருகிறார். சோனி கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கரோனா காரணமாக தள்ளிப்போன வெனம் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புதிய வெளியிட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.