மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வெள்ளி கிழமை தேதி 26.03.2021, நல்ல நேரம் :காலை 9.-30-10.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாமல் மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம் :
தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு அனைத்தும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் வீண்வாதங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். ஒரு காரியத்தை எடுக்கும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம் :
குடும்பத்தில் இருந்த பழைய கடன்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புதிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
கடகம் :
குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல மாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம் :
எடுத்த காரியங்களில் முழு ஈடுபாடோடு செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் நல்ல பலன் உண்டாகும்.
கன்னி :
உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். எடுத்த காரியங்களில் தடைகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை தவிர்த்தல் நல்லது. வெளியில் பணிபுரிபவர்களுக்கு நிதானம் கிடைக்கும்.
துலாம் :
வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் அரங்கேறும். உங்கள் திறமையால் வேலையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
விருச்சிகம் :
விட்டுக்கொடுத்து செல்வதால் பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபம் குறையும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் பெண்கள் சிக்கனமாக இருப்பதால் பொன் பொருள் வந்து சேரும்.
தனுசு :
வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் அமையலாம். உத்தியோகத்தில் உடன் பணி செய்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உறவினர் வழியாக சுப செய்திகள் வந்தடையும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் :
உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினை உண்டாகும். வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்கள் கைகொடுத்து உதவக்கூடும்.
கும்பம் :
எடுத்த காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தின் உதவியால் பணவரவு சீராக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மீனம் :
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவை இல்லாத பிரச்சினையை தவிர்க்கலாம் அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.